ஒன்றுவிட்ட சகோதரனால் கசிப்பு பருக்கப்பட்ட இரண்டு சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எழுதுமட்டுவாள் பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்தது.
4,7 வயதான இரண்டு சிறுவர்கள் மதுபோதையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் தாயாரால் அனுமதிக்கப்பட்டனர். தாயாரின் சகோதரியின் மகனால் அவர்களுக்கு வலுக்கட்டாயமாக கசிப்பு பருக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இரண்டு சிறுவர்களும் அதிகமான போதையில் இருந்ததால், மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.