தொடர்கிறது போர் சரணடைய மறுத்த உக்ரைன் வீரர்களின் இறுதி நிமிடங்கள் சரணடையுமாறு கூறிய ரஷ்ய போர் கப்பல் கப்டனை கெட்டவார்த்தையால் திட்டிய உக்ரைன் வீரர்கள் தாக்குதலில் உயிரிழந்தனர்.கருங்கடல் பகுதியில் உள்ள உக்ரைனின் பாம்பு தீவில் 13 உக்ரைன் இராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, அப்பகுதிக்கு வந்த ரஷ்ய போர் கப்பல் ஒன்று உக்ரைன் வீரர்களை சரணடையுமாறு கூறியது.ரஷ்ய போர் கப்பலின் கப்டன் தீவில் உள்ள உக்ரைன் வீரர்களிடம் ஆயுதங்களை கைவிட்டு சரணடையுமாறு கூறினார். இது தொடர்பான ஓடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.அதில் ரஷ்ய போர் கப்பல் கப்டன் கூறுகையில், பாம்பு தீவு, இது ரஷ்ய போர் கப்பல். உங்கள் (உக்ரைன் வீரர்கள்) ஆயுதகளை கீழே போட்டுவிட்டு சரணடையும்படி நான் கேட்டுக்கொள்கிறேன் அல்லது உங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும். உங்களுக்கு கேட்கிறதா?’ என்றார்.இதற்கு, அந்த தீவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 13 உக்ரைன் வீரர்களின் தளபதி பதில் அளித்தார். அவர் கூறுகையில், சரி இது தான் முடிவு’ என்றார்.மேலும், அவர் ரஷ்ய போர் கப்பல் மற்றும் அதன் படை வீரர்கள், தளபதியை கெட்ட வார்த்தையில் திட்டி சரணடைய மறுத்தார்.இதனை தொடர்ந்து தீவில் இருந்த உக்ரைன் பாதுகாப்பு படையினர் மீது ரஷ்ய போர் கப்பல் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் உக்ரைன் வீரர்கள் 13 பேரும் மரணமடைந்தனர்.