கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை நெடும்பனை பகுதியிலுள்ள பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தவர் குடவட்டூர் பகுதியைச் சேர்ந்த சந்தீப் (42). மது போதைக்கு அடிமையான சந்தீப், ஆசிரியர் பணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில், தனது சகோதரனுடன் ஏற்பட்ட அடிதடி வழக்கில் சந்தீப்புக்கு காலில் காயம் ஏற்பட்டது. தான் தாக்கப்பட்டதாக பொலிசாரை அழைத்தார். அவரே மோதலிற்கு காரணம் என்பதை தெரிந்த போலீஸார் நேற்று இரவு அmவரை காவலில் எடுத்தனர்.
அவர் காலில் காயமடைந்திருந்ததால், அவரை . அவரை இன்று அதிகாலை 4:30 மணியளவில் கொட்டாரக்கரை அரசு தாலுகா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அவர் அமைதியாக இருந்ததால் பொலிசார் அவருக்கு கைவிலங்கிடவில்லை.
தாலுகா மருத்துவமனையில் ஹவுஸ் சர்ஜனாக பணிபுரிந்துவந்த மருத்துவர் வந்தனா தாஸ் (22) மருத்துவப் பரிசோதனை செய்திருக்கிறார். அவரது காலில் 6 தையல் இடப்பட்டது. அவர் அமைதியாக இருந்ததால், பொலிசார் மருத்துவரின் அறையை விட்டு வெளியே வந்துள்ளனர்.
அந்த சமயத்தில் சந்தீபின் உறவினர் ஒருவர் அங்கு வந்துள்ளார். அவரை பார்த்ததும் ஆத்திரமடைந்த சந்தீப், அவரை அடித்து விழுத்தி உதைந்துள்ளார். பின்னர், மருத்துவமனையிலிருந்த அறுவை சிகிச்சை கத்திரிக்கோலை எடுத்து மருத்துவர் வந்தனா தாஸை குத்தினார். மேலும், அங்கிருந்த மருத்துவமனை காவலாளி, போலீஸார் உள்ளிட்ட 4 பேரையும் குத்தியிருக்கிறார்.
அங்கிருந்தவர்கள் சந்தீப்பை மடக்கிப் பிடித்தனர். படுகாயமடைந்த மருத்துவர் வந்தனா தாஸை திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
அவரது முதுகில் 6 கத்தரிக்குத்து காயங்கள் காணப்பட்டன. சில குத்துக்கள் முன்பக்கத்திலும் காயத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோட்டயம் குறுப்பந்தரைப் பகுதியைச் சேர்ந்த மோகன் தாஸின் ஒரே மகளான மருத்துவர் வந்தனா தாஸ் கொலைசெய்யப்பட்ட சம்பவம் உறவினர்களைச் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதற்கிடையே, மருத்துவமனையில் பணியிலிருந்த மருத்துவர் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், ”சந்தீப், போலீஸார் அழைத்துவந்த குற்றவாளிதான். போலீஸார் முன்னிலையில்தான் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. போலீஸாருக்கும் காயம் ஏற்படும் அளவுக்கு வைலெண்டாக அவர் செயல்பட்டிருக்கிறார்.
ஹவுஸ் சர்ஜனான அந்த இளம் மருத்துவர் இந்தச் சம்பவத்தால் மிகவும் பயந்ததாக, பிற மருத்துவர்கள் தெரிவித்தனர். அந்த மருத்துவமனை பாதுகாப்பு மிகுந்த பகுதிதான். பாதுகாப்பு மிகுந்த பகுதியில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. மருத்துவர்களின் பாதுகாப்புக்காக தற்போதிருக்கும் சட்டத்தை இன்னும் வலுப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதைச் சட்டத் திருத்தமாகக் கொண்டுவர தீர்மானித்திருக்கிறோம்” என்றார்.