புத்தளம் தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் மாணவர்கள் சிலரை ஒழுக்கத்துடன் பாடசாலைக்கு வருமாறு எச்சரித்ததையடுத்து, ஆத்திரமடைந்த மாணவர்கள் ஒழுக்காற்று ஆசிரியரின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலுக்கு உள்ளானவர் புத்தளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஒழுக்கத்திற்கு பொறுப்பான ஆசிரியர் எச்.எம்.அஸ்கி என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வருடம் கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவர்கள் குழுவினால் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.