யாழ். வடமராட்சி கடலில் கட்டுமரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கடற்றொழிலாளி ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.
தும்பளை லூதர் மாத கோயிலடியைச் சேர்ந்த திருச்செல்வம் ஞானப்பிரகாசம் (வயது 69) என்பவரே உயிரிழந்தார்.
தனது கட்டுமரத்தில் கடற்றொழிலுக்காகக் கடலுக்குள் சென்ற வேளை, கட்டுமரம் கடலில் கவிழ்ந்ததில் அவர் கடலில் மூழ்கிச் சாவடைந்தார்.
உடற்கூற்றுப் பரிசோதனை
சடலம் சக தொழிலாளிகளால் மீட்கப்பட்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.