யாழ்ப்பாணம் , சுன்னாகம் பகுதியில் இன்று (03) இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்தார்.
சங்கானை பகுதியைச் சேர்ந்த 51 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில், சுன்னாக சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளும் வேன் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணித்த பெண் படுகாயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
விபத்து தொடர்பில் வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன்,
சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.