யாழ்ப்பாணத்தில் கடமையின் போது வீடொன்றின் முன் மது போதையில் நிர்வாணமாக உறங்கிக் கொண்டிருந்த கான்ஸ்டபிள் ஒருவரை ஊர்காவற்றுறை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று முன்தினம் இரவு, புங்குடுதீவு மடத்துவெளியில் அமைந்துள்ள கடற்படை சோதனைச்சாவடியில் மதுபோதையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நின்றிருந்தார்.
அவரால் பொதுமகன் ஒருவர் தாக்கப்பட்டதாக குறிப்பிட்டு, வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியான நிலையில் அதில், பொலிஸ் உத்தியோகத்தர் மதுபோதையில் தள்ளாடுவது தெரிந்தது.
பின்னர் பொலிஸ் உத்தியோகத்தர், புங்குடுதீவில் உள்ள வீடொன்றிற்கு சென்று, வீட்டின் முன்பகுதியில் நிர்வாணமாக தூங்கியுள்ளார்.
தகவலறிந்து அங்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் அவரை நெருங்கியதும் எழுந்த சந்தேக நபர் தனது சீருடையை விட்டுவிட்டு ஓடியுள்ளார்.
அவர் தப்பிச் செல்ல முயன்ற போது கம்பி வேலியில் சிக்கி காயம் அடைந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
அதேவேளை பொதுமகன் ஒருவரை தாக்கி அவரிடம் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.