2023 (2024) ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளிவரும் காலம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
அதன் படி, குறித்த பரீட்சையின் பெறுபேறுகள் இன்னும் 2-3 வாரங்களில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை கல்வி அமைச்சின் வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து
தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வெளியிட்டுள்ளார்.
அத்தோடு, பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதற்கு தேவையான அனைத்து பணிகளும் தற்போது நடைபெற்று வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.