இலங்கையில் எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அதிகாரியான இராமநாதன் அர்ச்சுனா போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சமீப காலமாக முகநூலில் வைத்தியர்கள் பலரை அவதுாறு செய்ததற்காக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் பிணையில் சில தினங்களுக்கு முன் வைத்தியர் அர்ச்சுனா வெளியே வந்துள்ளார்.
இவ்வாறானவொரு நிலையில் வைத்தியர் அர்ச்சுனாவுக்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் ஊசி சின்னம் கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் முகநூல் மூலம் தெரிவித்துள்ளார்.