அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்களுக்கான ஏலத்தில் ரிசப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இதுவரை அதிக விலை கொண்ட வீரர்களாக புதிய சாதனைகளை படைத்துள்ளனர்.
முன்னதாக பஞ்சாப் கிங்ஸ் அணி 26.75 கோடி ரூபாய்க்கு ஸ்ரேயாஸ் ஐயரை ஏலத்தில் எடுத்தது. எனினும் சில நிமிடங்களில் இதனை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் முறியடித்து.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 27 கோடி ரூபாய்க்கு ரிசப் பண்ட்டை வாங்கியது
சவூதி அரேபியா
சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் நேற்றும், இன்றும்இரண்டு நாட்கள் இந்த ஏலம் இடம்பெறுகிறது.
குறித்த ஏலத்தில் 574 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஆனால் முதல் நாளில் 84 பேர் மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்கள். இன்றைய ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸால், ஆர்ஸ்தீப் சிங் விற்கப்பட்ட 18 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார் ககிசோ ரபாடாவை 10.785 கோடிக்கும், ஜோஸ் பட்லரை 15.75 கோடிக்கும் குஜராத் டைட்டன்ஸ் வாங்கியது.
கடந்த பருவத்தில்; இரண்டு வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொண்ட பஞ்சாப் கிங்ஸ் 110.5 கோடியில் மிகப்பெரிய நிதித்தொகையை கொண்டுள்ளது.
இதற்கு நேர்மாறாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தலா ஆறு வீரர்களைத் தக்கவைத்துள்ளன.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்
கடந்த முறை, மிட்செய்ல் ஸ்டோர்க்கை 24.75 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். இந்த முறை ஸடார்க்கை 11.75 கோடிக்கு டெல்லி கெப்பிடல்ஸ் எடுத்தது. முகமது சமி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 10 கோடிக்கும், டேவிட் மில்லர் லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணிக்கு 7.5 கோடிக்கும் விற்கப்பட்டனர்.
யுஸ்வேந்திர சாஹல் பஞ்சாப் கிங்ஸால் 18 கோடிக்கும், முகமது சிராஜ், குஜராத் டைட்டன்ஸால் 12.25 கோடிக்கு வாங்கப்பட்டனர்.
கேஎல் ராகுல் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு 14 கோடிக்கு விற்கப்பட்டார். சமீர் ரிஸ்வியை டெல்லி கேபிடல்ஸ் அணி 95 லட்சத்துக்கு வாங்கியது.
மும்பை அணிக்காக விளையாடிய நெஹல் வதேராவை 4 கோடியே 20 லட்சம் கொடுத்து ஏலத்தில் எடுத்தது நூர் அஹ்மத்தை 10 கோடிக்கு சென்னை சுப்பர் கிங்ஸ் வாங்கியதுஹசரங்காவை 5.25 கோடிக்கு ராஜஸ்தான் அணி வாங்கியது இந்திய பந்துவீச்சாளர் ராகுல் சஹரை 3.2 கோடிக்கு ஹைதராபாத் அணி வாங்கியது
சென்னை சுப்பர் கிங்ஸ்
கலீல் அஹ்மத்தை 4.80 கோடிக்கு சென்னை சுப்பர் கிங்ஸ் வாங்கியது பிரசித் கிருஸ்ணாவை. 9.5 கோடிக்கு குஜராத் அணி வாங்கியது ஜேர்ஸ் ஹேசல்வுட்டை 12.50 கோடிக்கு ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வாங்கியது இந்திய விக்கெட் காப்பாளர் ஜித்தேஸ் சர்மா 11 கோடிக்கு ஆர்சிபி அணியால் வாங்கப்பட்டார்.
கிளென் மேக்ஸ்வெல் 4.20 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார் அவுஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஸ் 3.40 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.
அவுஸ்திரேலிய ஜேக் பிரேசர் மெக்கர்க் 9 கோடிக்கு டெல்லி அணியால் வாங்கப்பட்டார். அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வோர்னரை எந்த அணியும் வாங்கவில்லை. ரவிசந்திரன் அஸ்வினை சென்னை சுப்பர் கிங்ஸ் 9.75 கோடி ரூபாய்க்கு வாங்கியது.