இரணைமடு குளத்திற்கான நீர்வரத்து அதிகரிப்பால், மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக வான் கதவுகள் இன்று (26) திறக்கப்படலாம் என வெள்ள முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (26) பகல் வரை 36 அடி கொள்ளளவு கொண்ட இரணைமடுக்குளத்தின் நீர் மட்டம் 27 அடியை அண்மித்துள்ளது.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை
இரணைமடுக் குளத்தின் கீழ்ப்பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள நீர்பாசன குளங்கள் நிறைந்து வருகின்றதுடன், பிரமந்தனாறு குளம், கனகாம்பிகைக்குளம், வன்னேரிக்கும் ஆகியன வான் பாய்ந்து வருகின்றது.
இந்தநிலையில், தாழ்நில பகுதியில் உள்ள மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு அறிவுறுத்தி வருகின்றது.
இந்த நிலையில் கால்நடைகளை பாதுகாக்கும் நோக்குடன் பண்ணையாளர்கள் தமது கால் நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று வருகின்றனர்.
ஞானிமடம், மட்டுவில்நாடு கிழக்கு, இரணைமாதா நகர், நல்லூர், பரமன்கிராய், கௌதாரிமுனை பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், இடர் ஏற்படும் சந்தர்ப்பத்தில் இடர் கிராம சேவையாளர் ஊடாக முகாமைத்துவப்பிரிவு, பொலிஸார், இராணுவத்தினரின் உதவியை பெறுமாறும் மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.