குரோதி வருட தமிழ் புத்தாண்டின் புலம்பெயர் நாடுகளுக்கான சுப நேரங்கள் குறித்து லண்டன் கற்பகபதி கற்பக விநாயகர் ஆலய பிரதம குரு சைவப்புலவர் வசந்தன் குருக்கள் தெரிவித்துள்ளார்.
எமது ஊடகத்திற்கு வழங்கிய விசேட நேர்காணலொன்றிலே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும், சூரியனின் பிரவேசம் மேட இராசிக்கு போகின்ற நேரத்தையொட்டி பிறக்கின்ற சித்திரை மாத முதல் நாள் எங்கள் சமய மரபின்படி பெற்றோர்கள், தெய்வங்கள், பெரியவர்களினுடைய ஆசியை பெறுகின்ற நாளாக குறிப்பிடப்படுகின்றது.
தமிழ் புத்தாண்டு சுப நேரங்கள் புலம்பெயர் நாடுகளுக்கும் இலங்கை, இந்தியாவிற்கும் சில வேறுபாடுகள் வருவதை நாங்கள் பார்க்கலாம்.
இம்முறை வருகின்ற இந்த புத்தாண்டானது புலம்பெயர் நாடுகளில் வாக்கியப்படி 13ஆம் திகதி சனிக்கிழமை மாலை 03:45 க்கும் , திருக்கணிதப்படி 04:34 க்கும் சூரியன் மேட இராசிக்கு போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.
இதிலிருந்து ஒரு மணித்தியாலயம் கூடுதலாக ஐரோப்பிய நாடுகளுக்கு வரும். மருத்து நீர் வைக்கும் விஸ்வ புண்ணிய காலம் திருக்கணிதப்படி மதியம் 12.34 இலிருந்து இரவு 08:34 வரையான காலப்பகுதியாகும்.
கைவிசேடம் வழங்கும் நேரம் 13ஆம் திகதி சனிக்கிழமை மாலை 8 மணிக்கு பிறகு வழங்கலாம் தவறவிட்டவர்கள் அடுத்த நாள் ஞாயிற்று கிழமை காலை 8 மணியிலிருந்து 11 மணி வரை வழங்கலாம் .நீல நிற ஆடைகளை அணிந்து புத்தாண்டு பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவது நல்லது என குறிப்பிட்டுள்ளார்.