உயிர் தானம் தந்த கனடா தம்பதியினர்.
கடந்த பல வருடங்களாக இருதய நோயால் பெரிதும் அவதியுற்று மரணத்தை கையில் பிடித்து தத்தளித்து கொண்டிருந்த முல்லை மாவட்டத்தை சேர்ந்த தர்மினியின் இதய சத்திர சிகிச்சைக்கு தேவையான நிதியை தங்கள் மகன் திருமண நாளில் நிவாரண அமைபின் ஸ்தாபகர் செந்தில் குமரனிடம் வழங்கினார்கள்
கனடாவில் பிரபலமான Quality வெதுப்பகத்தின் உரிமையாளர்களான திரு திருமதி பிரான்சிஸ் தம்பதிகள். ஏழாயிரம் டொலர்களை வழங்கி உயிர் காத்த இந்த வள்ளல் குடும்பம், பல வருடங்களாக ஆண்டுதோறும் பனிரெண்டாயிரம் டொலர்களுக்கு மேல் நிவாரண அமைப்பின் பணிகளுக்காக வழங்கி வருபவர்கள் என்பது வரவேற்கத்தக்க விடயமாகவும். இது போல் ஒவ்வொரு புலம்பேர் உறவுகளும் சிந்தித்து செயலாற்றினால் எங்கள் தாய்நில உறவுகளின் நிலை நிச்சயம் மாறும்.


