Ujirppu - Tamil News
No Result
View All Result
  • பிரதான செய்திகள்
  • முக்கிய செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • செய்திகள்
  • உலகம்
  • பிரதான செய்திகள்
  • முக்கிய செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • செய்திகள்
  • உலகம்
No Result
View All Result
Ujirppu News
No Result
View All Result
Home உலகம்

மைதானத்தில் கதறி கதறி அழுத ரொனால்டோ !!!

12 months ago
in உலகம், செய்திகள், பிரதான செய்திகள், முக்கிய செய்திகள், விளையாட்டு
Reading Time: 2 mins read
0 0
A A
0
0
SHARES
64
VIEWS
Share on FacebookShare on Twitter

கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலகக் கிண்ணப் தொடரின் நேற்று நடந்த காலிறுதி போட்டியில் மொராக்கோ அணி போர்ச்சுகல் அணியை 1-0 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

உலக கிண்ணப் தொடர்பிக் இருந்து போர்ச்சுகல் அணி வெளியேறியவுடன் ரொனால்டோவின் கால்பந்து வாழ்க்கையும் முடிவுக்கு வந்துவிட்டதா? போர்ச்சுக்கல் அணி காலிறுதி போட்டியில் இருந்து வெளியேறியவுடன் ரொனால்டோவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

பார்வையிடாது

மகளை தாயாக்கிய காமுகனுக்கு கடூழிய சிறை!

கன்னத்தில் அறையும் சிகிச்சையால் பரிதாபமாக உயிரிழந்த பெண்!

இந்த புகைப்படத்தை அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தங்களின் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

தனது அணியின் பயிற்சியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதன் காரணமாக அவரது தகுதி குறைக்கப்பட்டு ஒரு மாற்று வீரராக அதாவது சப்ஸ்டியூட் ஆக ஆட்டத்தில் இறக்கப்பட்டார் ரொனால்டோ. 37 வயதாகும் ரொனால்டோவால் இன்னும் உலகக் கோப்பை வெற்றி என்ற மகுடத்தை சூட முடியவில்லை.

கடந்தமாதம் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கிளப்பில் இருந்து அவர் கோபமாக வெளியேறினார். எனவே அவரின் உலகக் கோப்பை கனவு தகர்ந்தாலும் திரும்பி சென்று ஆடுவதற்கு எந்த கிளப்பும் காத்திருக்கவில்லை.

மைதானத்தில் கதறி கதறி அழுத ரொனால்டோ! முடிவுக்கு வந்துவிட்டதா கால்பந்து வாழ்க்கை? | Fifa Football World Cup Ronaldo Crying In Ground

ஆனால் அவரது ரசிகர்கள் ரொனால்டோ அடுத்து எந்த கிளப்பில் விளையாடப் போகிறார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

போர்ச்சுகல் மக்கள் இன்னும் ரொனால்டோவை கொண்டாடிக் கொண்டு இருப்பதால் அவரின் எதிர்காலம் குறித்து அவர்கள் கவலை கொள்கின்றனர்.

ஒரு கோல், ஒரு கோபமான வெடிப்பு, பின்னர் நீக்கம் உலகக் கோப்பை போட்டி தொடங்குவதற்கு சற்றுமுன்னர் யுனெடெட் கிளப்பில் இருந்து ரோனால்டோ வெளியேறினார்.

மைதானத்தில் கதறி கதறி அழுத ரொனால்டோ! முடிவுக்கு வந்துவிட்டதா கால்பந்து வாழ்க்கை? | Fifa Football World Cup Ronaldo Crying In Ground

ஆனால், கத்தாரில் அவரது தொடக்க ஆட்டங்கள் சிறப்பாகவே இருந்தன. கானாவுக்கு எதிரான முதல் குழு போட்டியில் போர்ச்சுகல் அணியின் சர்ச்சைக்குரிய பெனால்டியில் அவர் வென்றார். ஃபிஃபா, அது முழுமையான நுண்ணறிவுத் திறனுடன் அடிக்கப்பட்ட கோல் என்று பாராட்டியது.

ஐந்து உலகக் கோப்பைகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற சிறப்பையும் ரொனால்டோ பெற்றார். ஆனால் பாதை ஒரே சீராக செல்லவில்லை. அடுத்த இரண்டு போட்டிகளில் அவர் எந்த கோலையும் அடிக்கவில்லை. அதற்குள் அணியின் பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டோஸுடன் மோதல் ஏற்பட்டது.

பின் தென் கொரிய அணியுடனான போட்டியில் மாற்று வீரராக பெஞ்சில் அமர வைக்கப்பட்டார். அதன் பின் சுவிட்சர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 16ஆவது இடத்தில் அவரின் பெயர் இருந்தது.

2008ஆம் ஆண்டு ரொனால்டோ முக்கிய போட்டிகளை விளையாடிய தொடங்கிய சமயத்திலிருந்து அவ்வாறு அவர் அமர வைக்கப்பட்டது இதுவே முதல்முறை.

அதேசமயம் அவருக்கு எதிராக களமிறக்கப்பட்ட கான்காலோ ரோமாஸ் ஹாட் ரிக் கோல் அடித்து அசத்தினார். அதேபோலதான் மொராக்கோ அணிக்கான போட்டியிலும் நடத்தப்பட்டார் ரொனால்டோ.

மைதானத்தில் கதறி கதறி அழுத ரொனால்டோ! முடிவுக்கு வந்துவிட்டதா கால்பந்து வாழ்க்கை? | Fifa Football World Cup Ronaldo Crying In Ground

ஆனால் ஆட்டத்தின் இரண்டாம் பாதியின் அதாவது 51ஆவது நிமிடத்தில் களமிறங்கினார் ஆனால் அப்போது ஏற்கனவே மொராக்கோ அணி ஒரு கோல் அடித்து முன்னனியில் இருந்தது.

கோல் ஏதும் அடிக்கவில்லை என்றாலும் சர்வதேச போட்டிகளில் 196முறை தோன்றி குவைத் கால்பந்து வீரர் பதார் அல் முடாவாவின் சாதனையை சமன் செய்தார்.

மைதானத்தில் கதறி கதறி அழுத ரொனால்டோ! முடிவுக்கு வந்துவிட்டதா கால்பந்து வாழ்க்கை? | Fifa Football World Cup Ronaldo Crying In Ground

ஆனால் இதை மறக்கமுடியாத ஒரு தருணமாக மாற்ற தவறவிட்டார் ரொனால்டோ. சர்வதேச அளவில் ஆண்களுக்கான கால்பந்து போட்டிகளில் 118 கோல் அடித்து சாதனை புரிந்திருந்தாலும் அந்த எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்ய அவரால் முடியவில்லை.

நேற்றைய ஆட்டத்தில் வெறும் பத்து முறை மட்டுமே பந்தை தொட்டார் ரொனால்டோ. 91ஆவது நிமிடத்தில்தான் அவர் ஒரு ஷாட்டை அடிக்க முற்பட்டார்.

ஆனால், மொராக்கோ கீப்பர் போனோவை தாண்டி அது கோலாக மாறும் சக்தியை கொண்டிருக்கவில்லை. ரொனால்டோ களத்தில் சரியான பந்துக்காக எப்போதுமே தயாராக காத்திருந்தார், ஆனால் ஒருபோதும் அது நிகழவே இல்லை. இறுதி விசில் ஒலிக்கப்பட்டதும் எதிரணியில் இருந்த சிலருடன் கைகுலுக்கி விட்டு, மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

ரொனோல்டோ தனது உணர்ச்சிகள் மேலோங்கும் முன்பு டனலுக்குள் நுழைந்து விட்டார். இந்த போட்டியை விட்டு வெளியேறும்போது இந்த உலகக் கோப்பை போட்டி எவ்வாறு சிறப்பாக அவரது நினைவில் இருக்கும் என்பதையும், அதே போல் பயிற்சியாளருடனான சலசலப்பையும் அவரது கண்கள் சிந்திய கண்ணீர் வெளிப்படுத்தியது.

அணியின் பயிற்சியாளர் சாண்டோஸ் இருவருக்கும் இடையேயான சர்ச்சையை வெளிப்படுத்திக் கொள்ளாமல், “கிறிஸ்டியானோ மீது வைக்கப்பட்ட விமர்சனம் அவரது விளையாட்டில் தாக்கம் செலுத்தியது என்று நான் நினைக்கவில்லை. நாங்கள் ஒரு ஒருங்கிணைந்த அணியாக இருக்கின்றோம்,” என்றார்.

ரசிகர்களின் ஆதரவு அவர்கள் ஒற்றுமையாக இருக்கலாம், எனினும், தங்களது அணி சிறந்த அணியா இல்லையா என்பது குறித்து நிறைய விவாதங்களுக்குப் பிறகு கோப்பை கனவை தவறவிட்டு நாடு திரும்புகிறது போச்சுகல் அணி.

முக்கிய இறுதிப் போட்டிகளில் எந்த ஒரு அணிக்கும் ஆச்சரியமான தோல்விகளைத் தொடர்ந்து புதிய சகாப்தங்கள் மற்றும் புதிய தொடக்கங்கள் வரும்.

ஆனால், சாண்டோஸ், அணியின் பயிற்சியாளாரக இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரி, அவர்கள் இப்போது ரொனால்டோவை நிராகரிக்க வாய்ப்பில்லை. யூரோ 2016 போட்டியில் வென்று, முதன்முறையாக போர்ச்சுகல் சர்வதேச போட்டி ஒன்றில் வெற்றிப் பெற்றுள்ளது என்ற சிறப்பை தேடி தந்தவர் ரொனால்டோ.

இப்போதும் இதை போர்ச்சுகல் மக்கள் மறக்கவில்லை. சனிக்கிழமையன்று அல் துமாமா ஸ்டேடியத்திற்கு வெளியே ‘ரொனால்டோ 7’ சட்டைகளை அணிந்திருந்த போர்ச்சுகல் ரசிகர்களின் எண்ணிக்கையே அதற்கு சான்று.

அடுத்த உலக் கோப்பை போட்டி தொடங்கும்போது ரொனால்டோவுக்கு 41 வயது ஆகியிருக்கும். ஆனால், அவர் விரும்பினால், நிச்சயமாக 2024 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கு மீண்டும் வர வாய்ப்பு உள்ளது.

அதற்குள் அவர் யாருக்காக விளையாடப்போகிறார் என்பது முற்றிலும் வேறு விஷயமாக இருக்கிறது. ஜனவரி 1 ஆம் திகதி அணிகளுக்கு இடையே வீரர்களை பரிமாறிக்கொள்ளும் நிகழ்வு தொடங்கும்போது ரொனால்டோவை ஒப்பந்தம் செய்ய பல கிளப்புகள் ஆர்வமாக உள்ளன,

சவுதி அரேபிய தரப்பில் அல்-நாஸ்ர் அவரை ஒரு பெரிய தொகையுடன் ஒப்பந்தம் செய்வதாக கடந்த வாரம் கூறியிருக்கிறார்.

தற்போதைய இந்தப் போட்டியில் மத்திய கிழக்கு மைதானம் அவருக்கு மகிழ்ச்சியை வழங்காமல் இருந்திருக்கலாம் – ஆனால் அடுத்ததாக அவர் களம் இறங்கும் இடமாகவும் இருக்கலாம்.

Tags: #Football
Previous Post

3 இளம் பிக்குகள் பாலியல் துஸ்பிரயோகம் !!!

Next Post

கொழும்பில் இடம் பெற்ற விபத்து – முச்சக்கரவண்டி சாரதி உயிரிழப்பு !!!

மேலும் செய்திகள்

மகளை தாயாக்கிய காமுகனுக்கு கடூழிய சிறை!
Breaking News

மகளை தாயாக்கிய காமுகனுக்கு கடூழிய சிறை!

2 days ago
கன்னத்தில் அறையும் சிகிச்சையால் பரிதாபமாக உயிரிழந்த பெண்!
Breaking News

கன்னத்தில் அறையும் சிகிச்சையால் பரிதாபமாக உயிரிழந்த பெண்!

2 days ago
மகளையே திருமணம் செய்துகொள்ளும் தந்தை! விசித்திரமான பழக்கத்தை கடைபிடிக்கும் மக்கள்
Breaking News

மகளையே திருமணம் செய்துகொள்ளும் தந்தை! விசித்திரமான பழக்கத்தை கடைபிடிக்கும் மக்கள்

2 days ago
ஆராதனைக்கு செல்லாததால் பங்குத்தந்தையால் தாக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில்!
Breaking News

ஆராதனைக்கு செல்லாததால் பங்குத்தந்தையால் தாக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில்!

2 days ago
10,000 ஆண்டுகள் ஓடக்கூடிய மிகப்பெரிய கடிகாரத்தை உருவாக்கும் Jeff Bezos!
Breaking News

10,000 ஆண்டுகள் ஓடக்கூடிய மிகப்பெரிய கடிகாரத்தை உருவாக்கும் Jeff Bezos!

2 days ago
மகளை தாயாக்கிய காமுகனுக்கு கடூழிய சிறை!
Breaking News

மகளை தாயாக்கிய காமுகனுக்கு கடூழிய சிறை!

2 days ago
Next Post
யாழ்ப்பாணம் – அரியாலையில் ரயிலுடன் பஸ் மோதி விபத்து; பஸ் சாரதி உயிரிழப்பு !!

கொழும்பில் இடம் பெற்ற விபத்து - முச்சக்கரவண்டி சாரதி உயிரிழப்பு !!!

பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் மீது மாணவர்கள் தாக்குதல் !!!

பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் மீது மாணவர்கள் தாக்குதல் !!!

ஏனைய செய்திகள்

மகளை தாயாக்கிய காமுகனுக்கு கடூழிய சிறை!

மகளை தாயாக்கிய காமுகனுக்கு கடூழிய சிறை!

December 7, 2023
கன்னத்தில் அறையும் சிகிச்சையால் பரிதாபமாக உயிரிழந்த பெண்!

கன்னத்தில் அறையும் சிகிச்சையால் பரிதாபமாக உயிரிழந்த பெண்!

December 7, 2023
மகளையே திருமணம் செய்துகொள்ளும் தந்தை! விசித்திரமான பழக்கத்தை கடைபிடிக்கும் மக்கள்

மகளையே திருமணம் செய்துகொள்ளும் தந்தை! விசித்திரமான பழக்கத்தை கடைபிடிக்கும் மக்கள்

December 7, 2023

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

பெயர் : திரு கந்தையா யோகராஜா
முகவரி : அரியாலை, பரிஸ், France, Callantsoog, Netherlands, Lewisham, United Kingdom

இறந்த திகதி : 14 Jun, 2021

மரண அறிவித்தல்

பெயர் : திருமதி இராசம்மா மார்க்கண்டு
முகவரி : அனலைதீவு, கிளிநொச்சி, Bondy, France
மறைவு : 21 May, 2021
Ujirppu - Tamil News

Developed by SS Creation Design

Navigate Site

  • பிரதான செய்திகள்
  • முக்கிய செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • செய்திகள்
  • உலகம்

Follow Us

No Result
View All Result
  • பிரதான செய்திகள்
  • முக்கிய செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • செய்திகள்
  • உலகம்

Developed by SS Creation Design

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In