ஜோசப் ஸ்டாலினின் கைது செய்யப்பட்டதை கண்டித்து கொழும்பில் இன்று இடம்பெறவுள்ள பாரிய போராட்டம்!
கடந்த மே மாதம் 28 ஆம் திகதி லங்கா வங்கி மாவத்தையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்றைய தினம் (03-08-2022) மாலை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஜோசப் ஸ்டாலினின் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாளையதினம் காலை 10.30 க்கு கொழும்பு புறக்கோட்டையில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
