சனி பெயர்ச்சி நவகிரகங்களில் வந்தாலே ஒருவித பயம் எல்லோருக்கு வந்துவிடுகிறது. சனிபகவானுக்காக பல பரிகாரங்களை செய்யத் தொடங்கி விடுகின்றனர்.
ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகாலம் தங்கும் சனிபகவான் 12 ராசிகளையும் சுற்றி வர 30 ஆண்டுகாலம் எடுத்துக்கொள்கிறார் எனவேதான் 30 வருடங்கள் வாழ்ந்தாரும் இல்லை தாழ்ந்தாரும் இல்லை என்கின்றனர்.
சனி இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடம் பாழ் என்று சொல்வார்கள். கும்ப ராசியில் இடப்பெயர்ச்சியாகியுள்ள சனி பெயர்ச்சியாலும் சனி பார்வையாலும் என்ன பலன்கள் கிடைக்கப்போகிறது. பலன்கள் என்ன கிடைக்கும் என்று பார்க்கலாம்.
சனிபகவான் நினைத்தால் சாதாரணமாக உள்ள ஒரு மனிதரை மாடமாளிகைக்கு அதிபதியாகவும் மாடமாளிகைகளில் சகலவசதிகளுடன் வாழ்வோரை கீழே தள்ளி ஆண்டியாகவும் பரதேசியாகவும் ஆக்கும் ஆற்றல் பெற்றவராவார்.
அதனால் தான் “சனி கொடுத்தால் யார் தடுப்பார்” என்ற அனுக்கிரகத்தையும் பெற்றார். சனியானவர் தன்னுடைய தசா காலங்களில் ஒருவருக்கு கொடுக்கும் செல்வமானது அவரது மூன்று தலைமுறைகளுக்கும் நிலைத்து நிற்கும் என்று கூறப்படுகிறது.
சனி பகவான் கொடுத்தால் யாராலும் தடுக்க இயலாது. அதனால் தான் “சனி கொடுத்தால் யார் தடுப்பார்” “சனியைப் போல் கொடுப்பாரும் இல்லை, சனியை போல் கெடுப்பாரும் இல்லை” என்ற வார்த்தைகள் வழக்கத்திற்கு வந்தன.
மேலும் இவரது தசா புத்தி அந்தர சூட்சம காலங்களில் ஒருவருக்கு தொழில் சொத்து, புகழ், அந்தஸ்து செல்வம் செல்வாக்கு இவற்றை அளித்து அது என்றும் அழியாமல் நிலைத்து நிற்க வைப்பார்.
சனி பகவான் கால புருஷ தத்துவப்படி 11ஆம் இடத்திற்கு வருகிறார். 11ஆம் இடம் என்பது தொழில் அல்லது வேலை மூலம் கிடைக்கும் ஊதியம் அல்லது சம்பளம் அல்லது லாபம் இவற்றைக் குறிப்பிடுவதேயாகும்.
மேலும் 11ம் இடம் என்பது ஜோதிட சாஸ்த்திரத்தில் ஒருவரது எண்ணம் ஆசை அபிலாஷை அத்தனையையும் பூர்த்தி செய்யும் இடமாகும்.
எனவே சனியானவர் எந்த ஒரு சின்ன விஷயமானாலும் அது நடப்பதற்கும் அதனால் மகிழ்ச்சி லாபம் அடைவதற்கும் காரணமாகிறார். எனவே சனி பகவான் அனுகூலம் இல்லாமல் எந்த ஒரு ஜீவனும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்க முடியாது.
சனி பகவான் ஒருவரின் ராசிக்கு 3,5,6,9,10,11 ஆகிய இடங்களில் பயணம் செய்யும் கால கட்டத்தில் சங்கடங்கள் இல்லாத சந்தோஷங்களைத் தருவார்.
சனி பகவான் தான் இருக்கும் இடத்தைப் பலப்படுத்துவார் என்றும், பார்க்கும் இடத்தைக் கெடுப்பார் என்றும் பொதுப்பலன்களாகக் குறிப்பிடப்படுகிறது.
எனினும், சனியானவர் 3, 7, 10, ஆகிய பார்வை மூலம் மற்ற ராசிகளைப் பார்வை இடுவார். இதில் 7, 10ம் பார்வைகள் சுமாராகவும் 3ம் பார்வையாக பார்வையிடுவது சற்று சிரமத்தை கொடுக்கும் என்றும் குறிப்பிடப்படுகிறது.
கும்ப ராசியில் இருந்து சனி பகவான் மூன்றாம் பார்வையாக மேஷ ராசியையும், ஏழாம் பார்வையாக சிம்ம ராசியையும், 10ஆம் பார்வையாக விருச்சிக ராசியையும் பார்வையிடுகிறார்.
சனி பகவானின் பார்வைக்கு சக்தி அதிகம், அவரது பார்வை பட்டாலே ஏதாவது பிரச்சினை வரும் என்று சொல்வார்கள். அதற்கு புராணத்தில் ஒரு கதை உள்ளது.
ஒரு முறை கயிலாயத்தில் விநாயகருடைய பிறந்த நாள் சீரும் சிறப்புமாக நடைபெற்று வந்தது. இந்த விழாவிற்கு தேவர்களும் முனிவர்களும் ஞானிகளும் கயிலாயம் சென்றார்கள்.
சனி பகவானும் அங்கு செல்ல விரும்பி தன் தாயிடம் அனுமதி கேட்க அவர் தாயான சாயாதேவி அங்கு செல்ல விடாமல் தடுக்க சனிபகவான் யாருக்கும் தெரியாமல் கயிலாயம் சென்று விநாயகருடைய சதுர்த்தி விழாவை பார்த்தார். அதன்பிறகு விநாயகருடைய தலை வெட்டப்பட்டு விட்டது. அதற்கு பதிலாக யானைத் தலை பொருத்தப்படுகிறது.
தனது மூத்த மகன் தலை வெட்டப்பட்டதற்கு சனிபகவான் தான் காரணம் என்று கருதி பார்வதி தேவி சனிபகவானின் கால் மூடமாகட்டும் என்று சாபமிடுகிறார்.
பதிலுக்கு சனியின் தாயான சாயாதேவி கோபப்பட்டு விநாயகப் பெருமாளின் வயிறு பெருகட்டும் என்று பதில் சாபமிட விநாயகரின் வயிறு பெரியதாகி அவரால் மெதுவாகத்தான் நடக்க முடியும் என்ற நிலை வந்ததாகக் கூறப்படுகிறது. சனியின் காலும் முடமனாதாகக் கூறப்படுகிறது.
சனி பகவான் மேஷ ராசிக்கு லாப சனி. அதே போல சிம்ம ராசிக்கு கண்டச்சனி, விருச்சிக ராசிக்கு அர்த்தாஷ்டம சனியாக அமரப்போகிறார்.
தனது 3வது பார்வையால் மேஷ ராசியையும் சிம்ம ராசியை 7வது பார்வையாகவும் விருச்சிக ராசியை 10வது பார்வையாகவும் பார்வையிடுகிறார் சனிபகவான்.
மேஷ ராசிக்காரர்களுக்கு லாப சனி காலத்தில் சனிபகவான் பார்வை உங்க ராசியில் விழுவதும் கூடுதல் பலம். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
உங்களின் செல்வாக்கும் சொல்வாக்கும் உயரும். சிம்ம ராசிக்காரர்களே சனிபகவான் உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் கண்டச்சனியாக அமரப்போகிறார். சனிபகவான் ஆட்சி பெற்று அமர்ந்து உங்க ராசியை பார்ப்பதால் கண்டச்சனியையும் கஷ்டமில்லாமல் கடந்துவிடுவீர்கள்.
வேலை மாற்றம் இடமாற்றத்திற்கு காத்திருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். திருமணம் தடைகளை தாண்டி நடைபெறும்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு நான்காம் வீட்டு அதிபதி நான்கில் ஆட்சி பெற்று அமர்வதால் பாதிப்புகள் இருக்காது. சனியின் பத்தாவது பார்வை உங்க ராசி மீது விழுவதால் தொழில் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். வீடு, கார் என வாங்குவீர்கள். பணவரவு அதிகரிக்கும் அதே நேரத்தில் நோய்களும் வெளிப்படும். நோய்களை குணப்படுத்துவீர்கள். தனவரவு அதிகரிக்கும். ஆசைகளை குறிக்கோள்களை சனி நிறைவேற்றுவார்.
சனி பகவான் பார்வையால் பாதிப்பிற்கு ஆளானவர்கள் சில பரிகாரங்களை செய்ய வேண்டும்.
ஆயுட் காரகன் என்று சொல்லப்படும், சனிபகவான் தனது இரண்டு மனைவிகளான மந்தா தேவி, ஜேஸ்டா தேவி இருவரோடும் தனது புதல்வர்களான காலத்தை நிர்ணயிக்கும் குளிகன், ஆயுளை நிர்ணயிக்கும் மாந்தி ஆகியோருடன் குடும்ப சமேதராய் அருள்பாலிக்கும் ஒரே இடம் திருநறையூர்.
இந்தியா முழுவதுமுள்ள கோயில்களில் இல்லாத சிறப்பாக தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் உள்ள திருநறையூர் நாச்சியார் கோயிலில் மங்களச் சனியாக குடும்பத்துடன் அருள்பாலிக்கிறார்.