ஏப்ரல் 3 ஆம் திகதி திங்கட்கிழமை சந்திரன் நாள் முழுவதும் சிம்ம ராசியில் சஞ்சரிக்க உள்ளார். இன்றைய கிரக நிலைகளுக்கு மத்தியில் கடக, துலாம் ராசிக்காரர்களுக்கு அனுகூலமாக இருக்கும், பிரதோஷ தினமான இன்று 12 ராசிகளுக்கு எப்படிப்பட்ட மேன்மை உண்டாகும் என்பதைப் பார்ப்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு வாரத்தின் முதல் நாள் தர்மப் பணிகளில் ஈடுபடுவீர்கள். இன்று பணியிடத்தில் சாதகமாக சில மாற்றங்கள் ஏற்படலாம். இது உங்களை முன்னேற்றத்தை நோக்கி அழைத்துச் செல்லும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் கடின உழைப்பு தேவைப்படும். மாலையில் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் தொடர்பாக சில சிக்கல்கள் ஏற்படலாம்..
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்களின் குடும்பத்தில் இன்று சுப நிகழ்ச்சி நடக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனை கிடைக்கும். இன்று குழந்தையின் எதிர்காலம் குறித்து சிறிது கவலைகள் ஏற்படலாம். தொழில், வியாபாரம் இன்று புதிய வேகம் பெறும். இன்று அலைச்சல் காரணமாக ஆரோக்கியத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். உங்கள் உடல்நிலை குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
மிதுனம்
இன்று மிதுன ராசிக்காரர்களுக்கு சமூகப் பணிகளில் ஆர்வம் அதிகரித்து பெரிய அளவில் ஈடுபடுவார்கள். இன்று வணிகம், வேலை தொடர்பாக பயணம் இனிமையாகவும் லாபகரமாகவும் இருக்கும். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆசியும் கிடைக்கும். இன்று தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. உணவு விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு பெறுவீர்கள்.
கடக ராசி
கடக ராசிக்காரர்கள் வாரத்தின் முதல் நாளில் திடீரென ஒரு பெரிய தொகை உங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. இது உங்கள் நிதி நிலையை வலுப்படுத்தும். நீங்கள் முதலீடு செய்ய சாதக நாளாக இருக்கும். இன்று உங்களின் மரியாதை, பதவி, கௌரவம் கூடும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள். இறை வழிபாடு மன நிம்மதியைத் தரும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று அரசியலில் எதிர்பார்த்த பலன்களைப் பெறுவார்கள். பிள்ளைகள் தொடர்பான பொறுப்பும் இன்று நிறைவேறும். நீண்ட நாட்களாகத் தடைப்பட்ட பணிகள் முடிக்க முடியும். உங்கள் வணிகத்திற்காக புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். இது எதிர்காலத்தில் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இன்று உங்களுக்கு கண் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே கவனமாக இருக்கவும்.
கன்னி
இன்று கன்னி ராசிக்காரர்களின் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டிய நாள். முழுமையான தகவல்கள் அறிந்து கொள்ளாமல் எந்த இடத்திலும் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். இன்று தொழில் ரீதியாக சில முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கும். தந்தையின் ஆலோசனை உங்களுக்கு தேவைப்படும். எதிரிகளிடம் கவனம். தாம்பத்திய வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் புதிய வருமானங்களைப் பெறுவீர்கள். இதன் காரணமாக உங்களின் நிதி நிலையும் வலுவடையும். மாணவர்கள் கல்வி, போட்டியில் சிறப்பான வெற்றியைப் பெறுவார்கள். பணியிடத்தில் பேச்சில் கவனம் தேவை. உங்களுக்கு சிறப்பு மரியாதை கிடைக்கும். தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் அதிக அலைச்சல் ஏற்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். பொருளாதாரம் வலுவாக இருக்கும். செல்வம், மரியாதை, புகழ் உயரும். உங்கள் தடைப்பட்ட வேலை இன்று முடிவடையும். ஆனால் நீங்கள் சோம்பலை கைவிட வேண்டிய நாள். வேலை மற்றும் வியாபாரத்தில், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியம். அன்புக்குரியவர்களுடன் மாலை நேரத்தை மகிழ்ச்சியாக செலவிடுவீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் பணப் பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்க வேண்டிய நாள். உங்கள் பணம் மற்றவர்களிடம் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது. சட்டப்போராட்டத்தில் நீங்கள் தோல்வியை சந்திக்க நேரிடும். எனவே கவனமாக இருங்கள். வீட்டுக்கு தேவையான பொருட்களுக்கு பணம் செலவழிந்தாலும் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் தொடர்பாக சில பயணங்கள் செய்ய நேரிடும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று வணிகத் துறையில் சாதகமான லாபத்தைப் பெறுவார்கள் மற்றும் உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும், எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் கவலைப்படுவீர்கள். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் இன்று கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். வாகனத்திற்காக செலவுகள் அதிகரிக்கக்கூடும்.
கும்பம்
கும்ப ராசிக்கு சொத்து, முதலீடு போன்ற அதிக பண பரிவர்த்தனை செய்வதற்கு முன் சட்ட விஷயங்களை ஆராய்ந்து அணுகவும். எந்த ஒரு புதிய ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடுவதைத் தவிர்க்கவும். குழந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் பெற்றோரின் ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள். அவர்களின் ஆலோசனையால் வணிகம் செழிக்கும். மாணவர்களின் மன சுமையை குறையும். படிப்பில் சிறப்பாக செயல்படுவீர்கள். மாலையில் உங்களுக்குப் பயனுள்ள சில நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.